main-heading

இளம் இந்திய நண்பர்கள் குழு (Young Indian Friends Club -YIFC) ஹாங்காங்கில் 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவின் அடையாளங்களையும், அதன் மதிப்பீடுகளையும் சமரசம் செய்து கொள்ளாமல், இந்திய இளைஞர்களை விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளின் மூலம் இணைப்பதே குழுவின் நோக்கம்.

ஹாங்காங் எமது வாழிடம். ஹாங்காங் சமூகத்தினரோடு நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், ஹாங்காங்கின் வளர்ச்சிக்குப் பங்காற்றுவதற்கும், மேலும் ஹாங்காங், சீனா மற்றும் நம் இந்தியத் திருநாடு ஆகியவற்றை கலாச்சார ரீதியாக இணைக்கும் சங்கிலியாக விளங்குவதற்கும் YIFC பெருமுயற்சி செய்கிறது.

விளையாட்டுப் போட்டிகள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் வாயிலாக சமூக அக்கறையையும், பகிர்ந்து கொள்ளும் பண்பையும் வளர்ப்பதற்கு YIFC முயற்சி செய்கிறது.

  1. YIFCஇல் இரண்டு பிரிவுகள் இயங்கி வருகின்றன :
  2. விளையாட்டுப் பிரிவு, நமது சமூகத்தினரிடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது.
  3. தமிழ் கற்பித்தல் திட்டம், நமது தாய்மொழியை நமது சிறார்களுக்கு 2004 முதல் பயிற்றுவித்து வருகிறது.

மேலதிகத் தகவல்களுக்கு குறிப்பிட்ட இணையதளப் பக்கங்களைப் பார்க்கவும்.

குறிக்கோள்:

சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பும் நடவடிக்கைகளில் பங்குபெறவும் சிறந்து விளங்கவும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அவர்கள் மதிப்புமிக்க குடிமக்களாக உயர்ந்து விளங்க வேண்டும்.