yifc-annual-report-title

“நம்மைப் படைத்த இறைவன், நமது சிந்தனையிலும், திறமையிலும் பெரும் ஆற்றலையும்,
திறனையும் வைத்திருக்கிறான். இந்தச் சக்தியை வெளிக் கொணரவும்,
வளர்த்தெடுக்கவும் வழிபாடுகள் நமக்கு உதவுகின்றன.”

Select the year to view its Annual Report

 

  1. Year 2014-2015
  2. Year 2012-2013
  3. Year 2011-2012
  4. Year 2010-2011
  5. Year 2007-2008
  6. Year 2006-2007
  7. Year 2005-2006
  8. Year 2004-2005

 

ஆண்டறிக்கை 2014 – 2015

 

அனைவருக்கும் எங்களின் இனிய நல்வாழ்த்துகளுடன் துவங்குகிறேன்.

2003ம் ஆண்டில் விளையாட்டிற்காக (sports activites) ஆரம்பிக்கபட்ட நம் இளம் இந்திய நண்பர்கள் குழு (Young Indian Friends Club – YIFC), 2004ஆம் ஆண்டு முதல் நம் சந்ததியினருக்கு நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பயிற்றுவிப்பதைத் தன் தலையாய நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே.

தமிழ் வகுப்பின் 11வது ஆண்டு நிறைவு விழா இதோ இறையருளால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த இனிய வேளையிலே அனைவரையும் உளப்பூர்வமாக வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இச்சிறிய சீரிய அமைப்பில் அங்கங்களாகி இன்று வரை இப்பணிக்காகத் துணை நிற்கும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியினை முதற்கண் சமர்ப்பிக்கிறேன்.

தமிழ் வகுப்பு 2014-15

2014-15 ஆண்டிற்கான தமிழ் வகுப்பு கடந்த செப்டம்பர் 06, 2014 வா யன் கல்லூரியில் வழமைபோல் தொடங்கி இன்று வரை மிகச் சிறப்பாக நடந்து நிறைவு விழா காணுவது மிகவும் சந்தோசமாக உள்ளது. கடந்த கல்வி ஆண்டைப்போல் இந்த ஆண்டும் புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகம் என்பதை இங்கே அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 2014-15 ஆம் ஆண்டு புதிய மாணவர்கள் சேர்க்கை மட்டும் 33, தொடர்ந்து பயிலும் மாணவர்களுடன் மொத்த எண்ணிக்கை 135.

வகுப்புகள் 1 முதல் 6 நிலைகளாக பிரிக்கப்பட்டு 6 வகுப்புகளாக நடத்தப்படுகின்றன. பாடதிட்டங்கள் – தமிழ்நாடு மட்டும் சிங்கப்பூர் பள்ளி பாடத்திட்டங்களின் அடிப்படையில் பாடநூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வகுப்புகள்:

நிலை 1 மொத்த மாணவர்கள் 30 – பொறுப்பாசிரியர்களாக – திருமதி சுதா ரவி அவர்களும், திருமதி கதீஜா கப்பார் அவர்களும்,

நிலை 2 மொத்த மாணவர்கள் 23 – பொறுப்பாசிரியர்களாக – திருமதி கண்மணி செல்வம் அவர்களும், திருமதி ராதா மணி அவர்களும்,

நிலை 3 மொத்த மாணவர்கள் 26 – பொறுப்பாசிரியர்களாக திருமதி பிரியா பூவராகவன் அவர்களும், திருமதி அனுராதா ரங்கநாதன் அவர்களும்,

நிலை 4 மொத்த மாணவர்கள் 30 – பொறுப்பாசிரியர்களாக திருமதி சித்ரா GKV அவர்களும், திருமதி மணிமேகலை அவர்களும்,

நிலை 5 மொத்த மாணவர்கள் 20 பொறுப்பாசிரியர்களாக திருமதி கலை அருண் அவர்களும், திருமதி கவிதா மோகன் அவர்களும்,

நிலை 6 மொத்த மாணவர்கள் 6 பொறுப்பாசிரியரக திருமதி அலமேலு இராமனாதன் அவர்களும்,

ஆசிரியர்களாகவும், இந்த ஆசிரியர்களுக்கு உதவியாளர்களாக செல்வி முர்ஷிதா ஷிரின், செல்வி ருக்ஷானா, திருமதி கதீஜா கப்பார் அவர்களும் திறம்படச் செயலாற்றி தமிழ் வகுப்பை நிறைவு செய்திருக்கிறார்கள்.

தமிழ் வகுப்பின் சிறப்பு நிகழ்வாக கடந்த ஏப்ரல் 19, 2015 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்பச் சிற்றுலாவில் – மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு அகமகிழ்ந்தார்கள்.

நம் அமைப்பின் மூலம் தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கு வெளி அங்கீகாரம் கிடைப்பதற்காக நம் அமைப்பு தமிழ் இணையப் பல்கலைகழத்தின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்திருப்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரும் காலங்களிலும் தமிழ் வகுப்புத் தொய்வின்றித் தொடர வேண்டும் அதற்காக என்றென்றும் உங்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும், ஈடுபாடும் தொடர்ந்து தர தாங்கள் யாவரையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் – நன்றி!

தலைவர்
இளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங்



Top

ஆண்டறிக்கை 2012 – 2013

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

தமிழ் வகுப்பு 2012-13

2012-13 ஆண்டிற்கான தமிழ் வகுப்பு கடந்த 8-09-2012 வழமைபோல் தொடங்கி இன்று வரை மிகச் சிறப்பாக நடந்து வருவதை காணும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது. கடந்த கல்வி ஆண்டைப்போல் இந்த ஆண்டும் புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகம் என்பதை இங்கே அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 2012-13 ஆம் ஆண்டு புதிய மாணவர்கள் சேர்க்கை மட்டும் 26, தொடர்ந்து பயிலும் மாணவர்களுடன் மொத்த எண்ணிக்கை 119.

வகுப்புகள் 1 முதல் 6 நிலைகளாக பிரிக்கப்பட்டு 6 வகுப்புகளாக நடத்தப்படுகின்றன.
பாடதிட்டங்கள் – தமிழ்நாடு மட்டும் சிங்கப்பூர் பள்ளிப் பாடத்திட்டங்களின் அடிப்படையில் பாடநூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வகுப்புகள்

நிலை 1 மொத்த மாணவர்கள் 29
ஆசிரியர்கள் :திருமதி ஷபீனா அப்துர்ரஹ்மான், திருமதி ராதா மணி

நிலை 2 மொத்த மாணவர்கள் 33
ஆசிரியர்கள்: திருமதி சுதா ரவி, திருமதி பிரியா பூவராகவன், திருமதி கவிதா மோகன்

நிலை 3 மொத்த மாணவர்கள் 18
ஆசிரியர்: திருமதி சித்ரா GKV

நிலை 4 மொத்த மாணவர்கள் 19
ஆசிரியர்: திருமதி அனுராதா
(கடந்த ஆண்டு இரு பிரிவுகளாக இருந்த வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்வாண்டு ஒரே வகுப்பாக நடைபெறுகிறது).

நிலை 5 மொத்த மாணவ்ர்கள் 8
ஆசிரியர்: திருமதி கண்மணி செல்வம்

நிலை 6 மொத்த மாணவர்கள் 12
ஆசிரியர்: திருமதி கலை அருண்

மேலும் திருமதி சுகந்தி பன்னீர்செல்வம், திரு ஷிபு டேனியல், திருமதி அலமேலு இராமனாதன் ஆகியோரும் ஆசிரியர்களாக வருகைதந்து தொடர்ந்து வகுப்புகள் நடைபெற உதவி புரிகிறார்கள்.

இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள தங்களை அனைவரையும் எப்படி வாழ்த்தினாலும் தகும். வரும் காலங்களிலும் தமிழ் வகுப்புகள் தொய்வின்றித் தொடர வேண்டும். அதற்காக என்றென்றும் உங்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும், ஈடுபாடும் தொடர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 29/09/2012 அன்று தமிழ் பண்பாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவிற்கு சிறப்பழைப்பாளாரக வருகைதந்திருந்த சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் நமது அழைப்பினை ஏற்றுத் தமிழ் வகுப்பிற்கு வருகை தந்து மாணவர்களுடன் கலத்துரையாடிய நிகழ்வு மிக மகிழ்வானதும் சிறப்பானதுமாகும்.

இறுதியாக இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று பணி செய்ய வாய்ப்பு தந்தமைக்காவும், என்னோடு எல்லாக் காரியங்களிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த நல்ல சந்தர்பத்தில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு – தொடர்ந்து பொறுப்பேற்று பணியாற்றவுள்ள இதே நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறி மீண்டும் உங்களின் நல்லாதரவினை வேண்டி நிறைவு செய்கிறேன்.

நன்றி

கலை அருண்
தலைவர்
இளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங்



Top

ஆண்டறிக்கை 2011 – 2012

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

இனிய மாலை வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரவிருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நன்னாட்களை வரவேற்றும், அதற்கான நல்வாழ்த்துகளை முன்ட்டியே கூறிக்கொண்டும் இவ்வாண்டு வளமிக்க, நலமிக்க, அரோக்கியமான, சந்தோசமிக்க ஆண்டாக அனைவருக்கும் அமைய வேண்டி இறைவனை பிரார்த்தித்து இளம் இந்திய நண்பர்கள் குழுவின் 2012ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.

2003ம் ஆண்டில் விளையாட்டிற்காக (sports activites) ஆரம்பிக்கபட்ட இளம் இந்திய நண்பர்கள் குழு (Young Indian Friends Club – YIFC), கூடவே 2004ஆம் ஆண்டு முதல் நம் சந்ததியினருக்கு நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பயிற்றுவிப்பதைத் தன் தலையாய நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்காகவே தமிழ் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளைக் கடந்து ஒன்பதாவது ஆண்டின் வகுப்புகள் இறையருளால் நல்ல முறையில் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இச் சிறிய சீரிய அமைப்பில் இன்று வரை இப்பணிக்காக துணை நிற்கும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் எனது நன்றியினை முதற்கண் சமர்ப்பிக்கிறேன்.

2012 – தமிழ் வகுப்பு நிகழ்வுகள்

Hong Kong New Legislative Council complex visit

Yau Tsim Mong District Council மூலமாக நமது தமிழ் வகுப்புக்கு Hong Kong New Legislative Council complex வளாகத்தைp பார்வையிடக் கிட்டிய வாய்ப்பை நம் தமிழ் வகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், முன்னாள்- இந்நாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 40 பேர் பயன்படுத்திக் கொண்டனர். நாள்: 15-05-2012. Legislative Councilor Hon. Starry Lee Wai King JP அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று கலந்துரையாடினார். இந்நிகழ்வு அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்ததில் மகிழ்ச்சியே.

தமிழ் வகுப்பு ஆண்டுவிழா (2011-12)

தமிழ் வகுப்பின் எட்டாவது ஆண்டு நிறைவு விழா ஜூன் 2, 2012ல் இப்பள்ளியின் வெளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய முஸ்லீம் சங்கத்தின் தலைவர் திரு ஜெபருல்லா தலைமை தாங்கினார். தமிழ் பண்பாட்டுக் கழத்தின் தலைவர் திரு சபியுர்ரஹ்மான் முன்னிலை வகித்தார்.

Hon. Ann Chiang Lai Wan JP (Legislative Councilor Kowloon West/Vice President DAB) மற்றும் Mr. Ip Ngo Tung, Chris – (District Councilor Yau Tsim Mong District) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியும், மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கியும் சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கும் பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

ஆசிரியர்கள் அமைப்பாளர்கள் கலந்துரையாடல்:

02 ஜூன் 2012 அன்று மாலை உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது அது சமயம் 2011-12 நடந்து முடிந்த தமிழ் வகுப்பு நடைமுறைகள் பற்றிய தகவல் பரிமாற்றமும் 2012-13 கல்வி ஆண்டு தமிழ் வகுப்பிற்க்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளூம் நடந்தன. நிகழ்ச்சி விருந்துடன் முடிந்தது.



Top

ஆண்டறிக்கை 2010 – 2011

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

இளம் இந்திய நண்பர்கள் குழு(YIFC ) கடந்த பல ஆண்டுகளாக தமிழ் வகுப்பை நடத்தி வருகிறது. இது ஏழாவது ஆண்டு.

முதலாவதாக நாம் இந்த வகுப்பை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கி வரும் நியூமேன் கத்தோலிக்கக் கல்லுரியின் முதல்வர் திருமதி தெரஸா அவர்களுக்கும் மற்றும் அலுவலக நிர்வாகிகள் திருமதி ஏக்னெஸ், திருமதி பேஸ்டி ஆகியோருக்கும் நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

2010 – 2011 ஆண்டில் YIFCயின் நிகழ்வைப்பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Student India Festival

31-1-2010 ல் Mongkok Community Hall இல் மாணவர்களுக்கான வினாடி வினா, விவாதம் போன்ற நிகழ்சிகளை Children Cultural Group என்ற அமைப்புடன் சேர்ந்து நடத்தினோம்., இந்த நிகழ்ச்சியின் Co-Sponsor இந்திய ஸ்டேட் வங்கி. இதில் HKMA David Li Kwok Po மற்றும் Po Leung Kok மாணவர்கள் WHO IS THE CAUSE OF GLOBAL WARMING “DEVELOPED COUNTRIES” or “DEVELOPING COUNTRIES” என்ற தலைப்பில் விவாதித்தார்கள்.

விவாதத்திலும் மற்றும் வினாடி-வினாவிலும் வெற்றி பெற்றோருக்கும், பங்கேற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வினாடி-வினா போட்டியைத் திருமதிகள் அனுராதா முகுந்தனும் சித்ரா சிவகுமாரும் நடத்தினார்கள். அவர்களுக்கு எங்களின் நன்றி.

யூனூஸ் பாய் புத்தக வெளியீடு:

அடுத்து நமது ஹாங்காங் தமிழ் சமூகத்தின் மூத்த பிரமுகர் திரு.யூனுஸ் பாய் அவர்கள் எழுதிய “எனது பர்மா குறிப்புகள்” புத்தக வெளியீட்டு விழா பிப்ரவரி 20, 2010 அன்று Yau Ma Te, Hendry G. Leung Community Hall லில் நடந்தது. நிகழ்ச்சியை தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், இந்திய முஸ்லிம் சங்கம், இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து YIFC-யும் நடத்தியது. இதில் நமது YIFC உறுப்பினர்களின் பங்கு கணிசமாக இருந்தது. நிகழ்ச்சியின் செலவினங்களுக்காக ஒரு மலர் செளியிடப்பட்டு விளம்பரங்கள் சேகரிக்கப்பட்டன. YIFC-யின் சார்பாக விளம்பரமும், வாழ்த்து செய்தியும் அளித்தோம்.

இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்னையிலிருந்து வந்த பேராசிரியர் திரு.சுப வீரபாண்டியன் அவர்களை நமது தமிழ் வகுப்பிற்கு பிப்ரவரி 21 அன்று அழைத்து வந்தோம். அவரது பேச்சு மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது. நமது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட திருமதி. ராஜி சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.

6-ஆம் ஆண்டு இன்பச் சுற்றுலா:

நமது தமிழ் வகுப்பின் இன்பச் சுற்றுலா கடந்த மே 9 அன்று Lady McLehose Holiday Village-இல் நடந்தது. மூன்று பேருந்துகளில் சென்றோம். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என எல்லாத் தரப்பினரும் கலந்து கொண்டார்கள்.

ஆண்டு விழா:

வழமையாக நடத்தும் அரங்கிற்கும் மற்றும் இதர அரங்கங்களிற்கும் முயற்சி செய்தும் இடம் கிடைக்காத பட்சத்தில் நமது ஆறாவது ஆண்டு விழாவை நடத்த முடியவில்லை என்பதை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு அதையும் சேர்த்து நடத்துகிறோம்.

2010 – 2011: இந்த பருவம் நமக்கு சற்று சிரமமாக இருந்தது ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே காரணம். இதற்காக நாம் TCA, IMA போன்ற அமைப்பின் ஆதரவை நாடினோம். புதிய மாணவர்களைச் சேர்ப்பதா என்பது கேள்விக் குறியாக இருந்தது. இறைவனின் உதவியால் நமக்கு புதிய ஆசிரியர்கள் அறிமுகமானார்கள். இன்று நம்மிடம் புதிய மாணவர்கள் (Beginners) 21 பேர் படிக்கிறார்கள். மொத்தம் 70 மாணவர்கள்.

புதிதாக நம்மோடு இணைந்திருக்கும் திருமதி. சுகந்தி பன்னீர் செல்வம், திருமதி. சித்ரா GKV, திருமதி. ஸ்ரீப்ரியா பூவராகன், திருமதி. அனுராதா ரங்கநாதன், திருமதி. கண்மணி செல்வம் ஆகியோருக்கு எமது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் நமது மற்ற ஆசிரியருக்கும் எனது நன்றியும், பாராட்டும் உரித்தாகுக.

Yau Tsim Mong District Council மூலமாக நமது தமிழ் வகுப்புக்கு Hong Kong இன் Legislative Council வளாகத்தைப் பார்வையிட வாய்ய்புக் கிட்டியது. ஜனவரி 15, 2010 அன்று குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுமாக 40 பேர்களுடன் பார்வையிட்டோம். இது ரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

பெற்றோர்கள் – ஆசிரியர்கள் சந்திப்பு

கடந்த மார்ச் 26 அன்று இதே அரங்கில் பெற்றோர்கள் – ஆசிரியர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பைப் பற்றியும் ஆசிரியர்கள் பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் கலந்துரையாடினார்கள்.
எமது தமிழ் வகுப்பின் பருவம் நேற்று மே 28-ல் முடிவுற்றது. அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

வரும் ஆண்டிலும் இந்த வகுப்பு தொடரவேண்டும். என்றென்றும் இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் தேவை என்று கேட்டு கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றி
செய்க் அப்துல் காதர்
தலைவர், YIFC



Top

ஆண்டறிக்கை 2007 – 2008

It is a great pleasure for me to submit the 4th Annual report of our Tamil Class. Thank God, we are able to conclude this year with a notable increase of children due to the availability of more class room space and an increase in the number of voluntary teachers. Let me go in detail.

As per previous years we had started our fourth year in our same lovable environment of Aladdin Gourmet owned by our beloved uncle Dr. Jowher Ali. It is a great pleasure for me to submit the 4th Annual report of our Tamil Class. Thank God, we are able to conclude this year with a notable increase of children due to the availability of more class room space and an increase in the number of voluntary teachers. Let me go in detail.

Our senior students from the Advance Class completed their learning and could not be accommodated to further their studies due to lack of space and were not admitted to the TTP this year. But we are certainly discussing on ways to keep them in our fold and further their knowledge in Tamil.

Moving Ahead

We have been lucky to obtain the class room space with the assistance and efforts of our brother Mr. M.W. Mohamed Mohideen, who had sought the assistance of DAB members and secured the availability of the Newmen Catholic College in Yau Ma Tei and shifted on 27 October 07 . On behalf of all at YIFC and the community in general we wish to express our sincere thanks and gratitude for his efforts.

I am sure that the children were missing the great atmosphere and the intimacy that has built up with it for the last 3 and half years at Aladdin. Yes, to improve, we need to move ahead and changes are inevitable. Thus we keep looking for options that will give us growth and enhance our developments.

Formal Classes were inaugurated on 3rd Nov 07 in the presence of our senior advisors, Dr. Jowher Ali, Mr.M.Ramanathan, Mr.S.M. Uzair and Mr. H. Mujeebur Rahman. Notable personalities attended the inauguration event were, The principal of Newman Catholic College Mr.Siu, Former Chairman of DAB, Mr.Tsang, Elder members of our tamil community, parents, teachers, students and many well wishers.

On the occasion of presenting this report, I would like to emphasis the great co-operation and the exceptional support given by the Principal of the college Mr.Siu. He has been so helpful to us that words cannot describe. We have had many discussions and exchange of views and have now made a clearer communication and understanding with the school that is working well for our community. He has always been affirmative to all our request and would also like to thank the support of Newmen Catholic College.

This year we are using about six classes in total and the classes are divided in to four levels:

Level One
Level Two
Level Three
Level Four

Events

  1. 1. Doctors’ Visit

    On 8 September 07, we have started our class for 07-08 and have invited a group of Doctors visiting from India to bless the children on the new term. It was a very useful interaction between the children and the doctors who had given valuable advises on the health issues of growing children for “SOUND BODY to have a SOUND MIND”

  2. 2. Mr.Gobinath from Vijay TV

    Mr.Gobinath from Vijay TV visited our class in November 07 and spent some quality time with the kids and shared his experience. It was an enjoyable experience for all. Mr. Gopinath was in Hong Kong to attend an event organized by TCA and was brought to our class with the initiative of its secretary Mr. Swaminathan, who has given exceptional support to our class.

  3. 3. Sunday Funday

    On 6th April 2008, we had arranged a picnic for the kids and their parents at Lei Yue Mun Holiday Camp, Chaiwan. This is one of our annual event which has attracted great enthusiasm from the children, parents and teachere alike. This year we had gone with 3 full buses and organized several activities with a short interaction with parents on the development of our class. Parents were urged to take more initiatives and follow on with the lessons and show more commitments for the betterment of their children in particular and our activities in general. Together we can all achieve a better world for our kids.

    Samayal Killadigal. The highlight program of this years picnic was the cooking contest. Eligibility for entry was limited to parents/guardians and teachers (or their spouses) of our class. We had 16 participants in total who had prepared some exceptionally authentic sweet dishes which were mouth watering and a treat to watch with lavish designs and displays. The interest and enthusiasm were clearly visible and am sure that we can conduct similar contest in the future regularly. We have awarded three prizes for the winners, which will be presented at our Annual Day and all participants were promised with a token souvenirs and certificate in appreciation.

    We have conducted various sports activities for the students, parents and guests. Cricket was played with great interest. Cycling, Basket ball, Table Tennis, Badminton, Arts and Craft lessons, Air Hockey, rope climbing and many other activities were enjoyed by children and adults alike.

    Sports competition were also conducted for children and parents alike and prizes were announced for the winners. All these prizes will be distributed to them shortly due to lack of time at today.

    In all it was a great day with lot of fun and many cherished memories. As per previous years, all expenses for the day were absorbed by the club.

Teachers Forum.

On April 26, teachers forum was conducted in the residence of our vice president Mr. Abul Azeez in Tsim Sha Tsui. All the teachers attended and had various discussions about the present conduct of the classes and also for the future development of the classes. Such meeting within the teaching panel is decided to be organized regularly to better co-ordinate teaching and related issues.

One to One Parents Meeting.

On May 3, 08 we have called all the parents for a meeting. Parents met with their child’s respective teachers and discussed their progress in the classes. We thank all the parents and the teachers for their efforts, commitments and co-operations.

YIFC Website

We are proud to launch a website of our club and Tamil Teaching Program at this years Annual Day. I am sure this will become a tool for better communication, maintain organized record of activities and above all share the benefits of co-operation. I urge every member of the community to give suggestions for improvement. We are planning to make this a tool for communication within the students, parents, teachers and the organizer.

Many have toiled and spent their valuable time and knowledge in making this launch possible today and would like to express my sincerest appreciation and gratitude for their efforts and request them to please keep up the good work in updating and improving the site regularly. My special thanks goes to Mrs. Deepa Swaminathan, Mr. Satish, Mrs. Zainab, Mr. Deen and our respected senior advisor Mr. M. Ramanathan for their tremendous commitment to this project.

I would also like to give a word of appreciation to Mrs. Izzath Hameed and other sisters who have trained the kids for today’s program.

Conclusion

Last year we had promised to strive to take this class to the next stage and with Thanks to the Almighty, we have progressed well in this directions this year and hopefully maintain the momentum to keep moving ahead. I am sure with the wishes and support of all of you, God will help us to give our children our best support.

I salute the selfless and tireless efforts and commitments of my fellow friends to make this year another fruitful journey and pray to God Almighty to bless all the time and efforts we are sparing for this efforts.

I record my sincere apologies for not being to able to present this report my self as I am forced to be away from Hong Kong due to my personal needs. Together we shall achieve.

Thank God and Best regards

Thaika Ubaidullah
President



Top

ஆண்டறிக்கை 2006 – 2007

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

“தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற கூற்றின்படி தாய்மொழியாம் இன்பத் தமிழ் மொழியைப் பயின்று வரும் எனது அருமை குழந்தைச் செல்வங்களே! பெற்றோர்களே! ஹாங்காங் வாழ் தமிழ் அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு 2006-2007 ஆண்டுக்கான தமிழ் வகுப்பின் இந்த ஆண்டறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது தமிழ் வகுப்பு, பெற்றோர்களின் ஆதரவோடும் குழந்தைகளின் ஆர்வத்தோடும் ஒன்றிணைந்து சிறப்பான மூன்று ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

இந்த மூன்றாம் வருடக் கல்வியாண்டு, 2006 செப்டம்பரில் தொடங்கப்பட்டு, 2007 மே மாத இறுதியில் முடிவடைகிறது. இந்நேரத்தில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

தமிழ்க் கல்விப் பாடத் திட்டம்:

கடந்த இரண்டு வருடங்களைப் போலவே இந்த வருடமும் பாடத் திட்டங்கள் சிறப்பாக வகுக்கப்பட்டு அதன்படி கற்பிக்கப்பட்டது. சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் தொடக்கப் பள்ளிகளுக்கான பாட நூல்களும் பயிற்சி நூல்களும் பயன்படுத்தப்பட்டன. வெளிநாட்டில் தமிழ் கற்கும் ஹாங்காங் சூழழுக்கு இவை பொருத்தமாக அமைந்திருக்கின்றன. இந்த ஆண்டில் மொத்தம் 34 மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். மொத்தம் நான்கு வகுப்புகள்.

  1. உயர்நிலை
  2. நடுநிலை
  3. இள நிலை
  4. முதல் நிலை

1. உயர்நிலை :

இந்த வகுப்பில் மொத்தம் 8 மாணவர்கள்.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இந்த வகுப்பைத் திறம்பட நடத்திச் செல்பவர் இதன் ஆசிரியை திருமதி. முயினா சாமு அவர்கள்.

2. நடுநிலை :

இந்த வகுப்பில் மொத்தம் 15 மாணவர்கள்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வகுப்பின் ஆசிரியை இருந்து வருபவர் திருமதி. அலமேலு இராமனாதன் அவர்கள். எனில், உடல்நலக் குறைவு காரணமாக இந்தக் கல்வியாண்டின் நவம்பர் மாதம் முதல் அவர்களால் எல்லா வகுப்புகளுக்கும் வர முடியவில்லை. தொடக்கத்தில் திரு. சிபு டேனியல் அவர்களும் பிறகு நமது தமிழ் வகுப்புத் திட்டத்தில் பிப்ரவரி முதல் புதிய ஆசிரியையாக இணைந்திருக்கும் திருமதி. நளினா இராஜேந்திரன் அவர்களும் வகுப்புகளைத் தொய்வின்றி நடத்திச் செல்கிறார்கள்.

3. இளநிலை :

இந்த வகுப்பில் மொத்தம் 5 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கடந்த ஆண்டுகளில் இவ்வகுப்பின் ஆசிரியராக இருந்த திருமதி. கலை அருண் அவர்களே இவ்வாண்டும் தொடர்ந்து நடத்திவருகிறார். மேற்கூறிய 3 பிரிவுகளில் உள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் நமது தமிழ் வகுப்புத் திட்டத்தில் கடந்த 2 வருடங்களாகப் பயின்று வரும் மாணவர்களே.

4. முதல் நிலை :

இதில் மொத்தம் 6 மாணவர்கள். இவர்கள் அனைவரும் இந்த வருடம் சேர்ந்த மாணவர்கள். இந்த வகுப்பை திரு. சிபு டேனியல் நடத்தி வருகிறார். இந்த எல்லா வகுப்புகளுக்கும் இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தியிருக்கிறோம். இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்களை திரு. காழி அலாவுதீன் அவர்கள் ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து தயார் செய்து வருகிறார். இவர்கள் அனைவரின் இந்தத் தன்னலமற்ற சேவைக்கு மாணவர்கள், பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெற்றோர்கள் கூட்டம் :

முதலாம் பருவத் தேர்வு சென்ற ஜனவரி மாதம் நடந்தது. தேர்வு முடிந்த பிறகு பெற்றோர்கள் கூட்டம் நடத்தினோம். அதில் பெற்றோர்கள் தனித்தனியாக அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுடன் தங்கள் குழந்தையின் கல்வி நிலையை பற்றியக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

இந்த ஆண்டு வகுப்புகள் தொடங்கி நான்கு மாதங்களுக்குப் பிறகு, சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் (6 மாணவர்கள்) சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் வகுப்புக்கும் வந்தார்கள். அவர்களது திறனைத் தரப்படுத்திப் பார்த்ததில் அந்த 6 குழந்தைகளுக்கென்று ஒரு தனி வகுப்பு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இடப் பற்றாக்குறை காரணமாகப் புதிய வகுப்பைத் தொடங்க முடியவில்லை. அவர்களை அடுத்த ஆண்டில் சேர்த்துக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறோம்.

கொண்டாட்டங்கள் :

நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள், பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய சிறப்பு நாட்களை இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் குழந்தைகளோடு கொண்டாடினோம்.

உல்லாசப் பயணம் :

ஆங்கிலப் புத்தாண்டு நாள் அன்று (1.1.2007) ஓர் உல்லாசப் பயணமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் காலை 10 மணியளவில் 2 பேருந்துகளில் Chaiwanஇல் உள்ள Kasim Tuet Memorial Collegeக்குச் சென்றோம். காலையில் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. சுவையான மதிய உணவிற்குப் பிறகு குழந்தைகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளை நடத்தினோம். சுமார் 5 மணியளவில் வீடு திரும்பினோம். இந்த உல்லாசப் பயணத்தில் திரு. நஜீமுதீன், திரு, மு,இராமனாதன், திரு, ஜமால் மற்றும் திரு, இராமனுஜம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்த உல்லாசப் பயணத்தின் செலவுகளை, YIFC தமிழ் வகுப்பு ஏற்றுக் கொண்டது.

திரு. கிரேஸி மோகன் :

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு இந்தியாவிலிருந்து வருகை தந்த நாடக நடிகர் திரு,கிரேஸி மோகன் அவர்கள் டிசம்பர் 15 அன்று தமிழ் வகுப்புக்கு வருகை தந்தார். இது தமிழ் வகுப்பு நடக்கும் சனிக்கிழமை அல்லாத மற்ற நாள் ஒன்றில் அமைந்திருந்த போதும் அன்றைய தினம் தமிழ் வகுப்புக் குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். திரு, கிரேஸி மோகன் அவர்கள் நம் குழந்தைகளோடு நகைச்சுவை ததும்ப உரையாடினார். சிற்றுண்டியோடு இந்த நிகழ்வு நிறைவு பெற்றது. இதற்கு ஏற்பாடு செய்து தந்த தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்திற்கும் அதன் அப்போதையத் தலைவர் திரு. சுந்தர் குமார் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் :

சென்ற ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்திய கலை நிகழ்ச்சிக்குது தமிழ் வகுப்பு மாணவர்களும் நிகழ்ச்சிகள் வழங்க அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ‘பட்டிமன்றம்’, ‘ஊர் வம்பு’ போன்ற கலை நிகழ்ச்சிகளை நமது மாணவர்கள் நடத்தினர்.

அமைப்பின் வரவு செலவு கணக்குகள் :

ஒவ்வொரு மாணவரிடமும் நடைமுறைச் செலவுக்காக மாதந்தோறும் $100 வசூலித்து வருகிறோம். இதை முறையாக வசூலிப்பவர் திரு. சேக் அப்துல் காதர், வரவு, செலவுகளையும் அதன் கணக்குகளையும் நான் பொறுப்பெடுத்துச் செய்து வருகிறேன். இந்தக் கணக்குகளைப் பற்றி YIFC உறுப்பினர்களோடு அவ்வப்போது கலந்து ஆலோசித்து வருகிறோம்.

டாக்டர் ஜவஹர் அலி :

டாக்டர் ஜவஹர் அலி அவர்களுடைய உணவகத்தில்தான் நமது தமிழ் வகுப்பு எல்லா சனிக்கிழமை மதியப் பொழுதுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த இடம் நமக்குக் கிடைக்கப் பெறாமல் இருந்திருந்தால், இந்த வகுப்பு நடத்துவதற்குச் சாத்தியமே இல்லாமல் போயிருக்கும். டாக்டர் அவர்களுக்குக் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் அமைப்பாளர்களின் சார்பாக என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்கொடை

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தினர் $5,000 நன்கொடையாகத் தந்தார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முடிவுரை :

இந்தத் தமிழ் வகுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த வருடமும் ஒற்றுமையுடனும் முனைப்புடனும் செயல்பட்டது. மாணவர்களின் ஊக்கம், பெற்றோர்களின் ஒத்துழைப்பு, புரவலர்களின் ஆதரவு, ஆசிரியர்களின் கடின உழைப்பு, தன்னார்வத் தொண்டர்களின் அயராதம் பணி எல்லாம் இணைந்து தமிழ் வகுப்பை நடத்தி செல்கிறது. வரும் காலங்களில் இந்த வகுப்பு மேலும் சிறப்பாக நடைபெற உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு என்றும் தேவை என்று கூறி முடிக்கிறேன்.

நன்றி
உங்களின்,
அப்துல் அஜீஸ்.



Top

ஆண்டறிக்கை 2005 – 2006

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

அன்பார்ந்த ஹாங்காங் வாழ் தமிழின மக்களே! அன்பு உள்ளம் கொண்ட குழந்தைச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்களைத் தெரிவித்து, 2005-2006-கான தமிழ் வகுப்பு ஆண்டறிக்கையை வாசிப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் அனைவரது பேராதரவாலும், ஒத்துழைப்பாலும் நம் முதல் ஆண்டு சிறப்பாக முடிவு பெற்று இரண்டாவது ஆண்டையும் நல்லபடியாகக் கடந்திருக்கிறோம்; வருங்காலங்களிலும் சிறப்பாகச் செயல்பட நம் அனைவருக்கும் இறைவனின் அருளும், உதவிகளும் கிடைக்கப் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

இந்த வருடக் கல்வியாண்டு சென்ற செப்டம்பரில் துவங்கப்பட்டு மே 27ல் முடிவுற்றது. இந்தக் கல்வியாண்டில் நடந்த நிகழ்வுகளைச் சுருக்கமாக இந்த அறிக்கையின் மூலம் பதிவு செய்கின்றோம்.

தமிழ்க் கல்வி :

சென்ற வருடம் போல் இந்த வருடமும் பாடத்திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டு அதன்படி கற்பிக்கப்பட்டது. இந்த வருடம் பயிற்றுவிக்க முறையான ஆசிரியர்கள் இருப்பார்களா என்ற கவலை எங்களை ஆரம்பத்தில் ஆழ்த்தியது. இதை அறிந்து இந்த நல்ல பணிக்கு தடங்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் பாடங்களைக் கற்றுக் கொடுக்க முன்வந்த ஆசிரியைகளையும், அவர்களது குடும்பத்தினர்களையும் நன்றியோடு நினைத்து எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த வகுப்பு தற்போது நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

உயர்நிலை
நடு நிலை
ஆரம்ப நிலை 1 (ஒன்று)
ஆரம்ப நிலை 2 (இரண்டு) என்பன அந்த நான்கு பிரிவுகள்.

உயர்நிலை வகுப்பிற்கு திருமதி. முயினா சாமு அவர்களும், நடுநிலை வகுப்பிற்கு திருமதி. அலமேலு இராமனாதன் அவர்களும், ஆரம்ப நிலை வகுப்பிற்கு திருமதி. சித்தி நெய்னா அவர்களும் ஆசிரியைகளாக இருந்து திறம்பட கற்பிக்கிறார்கள்.
திரு.காழி அலாவுதீன் பாடத்திட்டங்களையும், தேர்வு முறைகளையும் முறைப்படுத்தி, ஆசிரியைகளுடன் கலந்தாலோசித்து, எல்லா வகுப்புகளையும் கண்காணித்தும் வருகிறார். அவரது உழைப்பு இந்தத் திட்டத்தின் ஆணிவேராக இருக்கிறது. தன்னுடைய சொந்த குழந்தைகளையும்,
குடும்மபத்தினரை வீட்டில் விட்டு விட்டுத் தேந்தமிழை நம் ஹாங்காங் குழந்தைகளுக்கு ஊட்டும் நமது ஆசிரியப் பெருமக்களின் இந்தச் சேவைக்குத் தலை வணங்குகிறோம்.
மேலும் பலரும் இந்த உன்னத சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும்படி இந்த நல்ல நேரத்தில் பணிவன்புடன் வேண்டுகிறோம்.

நிகழ்வுகள் :

1. கொண்டாட்டங்கள் :

நோன்புப் பெருநாள், பக்ரீத்,புது வருடம், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் இந்த நாட்களை குழந்தைகளோடு இனிப்புகள் வழங்கியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் மகிழ்ச்சியோடு கொண்டாடினோம்.

2. இன்பச் சுற்றுலா :

SUNDAY FUNDAY ஏப்ரல் 23ஆம் தேதி Lady Maclehose Holiday Camp. இரண்டு பேருந்துகளில் குழந்தைகளுடனும், பெற்றோர்களுடனும் சென்று வந்தோம். முக்கியமாக, இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பெற்றோர்களுடன் தமிழ் வகுப்பைப் பற்றிக் கலந்துரையாடினோம். பல பெற்றோர்கள் நல்ல ஆலோசனைகள் கூறினார்கள். அவற்றில் முக்கியமாக:

1. குழந்தைகளுக்கு வகுப்புக் கையேடு (HAND BOOK): நாங்கள் அதை வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் வடிவமைப்பிற்கு யோசனை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

2. வகுப்புடன் சேர்ந்து குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சி போன்ற இதர முயற்சிகளையும் செய்யும்படி வேண்டினார்கள்.

சுற்றுலாவில் பெற்றோர் – குழந்தைகளுக்கான அறிவுப் போட்டி நடத்தப்பட்டது.

குழந்தைகள் மதிய உணவுக்குப் பிறகு TABLE TENNIS, நீச்சல் மற்றும் இதர விளையாட்டுகளில் ஈடுபட்டு உல்லாசமாக நேரத்தைக் கழித்தார்கள். இந்தச் சுற்றுலாவில் பெற்றோர் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டு உண்டதில் ஒரு தனி மகிழ்வு இருந்தது. இந்த சுற்றுலாச் செலவுகளை YIFCயின் தமிழ் வகுப்பு ஏற்றுக்கொண்டது.

இப்தார் நிகழ்ச்சி :

புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றை தமிழ் வகுப்பு மூலம் ஏற்பாடு செய்து இருந்தோம். இதில் மார்க்க அறிஞர் திரு. கம்பம் பீர் முஹம்மது அவர்களுடைய அழகிய தமிழ் சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நம் தமிழ் மக்கள் பல சமயத்தினராக இருந்தனர், இது சகோதரத்துவத்தையும், உண்மையான தமிழ்ப் பற்றையும் வெளிப்படுத்தியது. வருங்காலங்களிலும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்படி பெரியவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

அமைப்பு:

தமிழ் வகுப்புக்கு சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் ஒற்றுமையுடனும், முனைப்புடனும் செயல்பட்டது. வரவு – செலவுக் கணக்கை என்னிடம் ஒப்படைத்துள்ளார்கள். அதை நான் நண்பர்களின் ஒத்துழைப்போடு கவனித்து வருகின்றேன். திரு. சிபு டேனியல் நமது குழுவில் புதிதாக இணைந்திருகிறார். இன்னும் பல குழந்தைகளும் வகுப்பில் சேர்ந்து நம் தாய் மொழியை கசடறக் கற்க வேண்டும் என்பதே நம் ஆசையும், நோக்கமும் ஆகும். இந்த ஆக்கப் பணிக்கு உதவ நினைக்கும் அனைத்து நெஞ்சங்களையும் வரவேற்கிறோம். உங்கள் வருகை நிச்சயமாக இந்த பணித் தொய்வின்றி நடப்பதற்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

டாக்டர் ஜவஹர் அலி :

டாக்டர் ஜவஹர் அலி அவர்களின் தாராள மனப்பான்மையும் , நாங்கள் கேட்காமலே உதவும் நல்லெண்ணமும் இந்தப் பணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.. இந்த நேரத்தில் குழந்தைகளின் சார்பாகவும், பெற்றோர்களின் சார்பாகவும், நம் தமிழ் சமுதாயத்தின் சார்பாகவும் டாக்டர். ஜவஹர் அலி அவர்களுக்கு உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

முடிவுரை :

வருங்காலங்களிலும் தொய்வின்றி இந்த முயற்சி நடைபெற உங்கள் அனனவரின் ஒத்துழைப்பும் தேவை என்று கூறி இந்த ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன்

நன்றி
உங்களின்
பிரபு சுஐபு



Top

ஆண்டறிக்கை 2004 – 2005

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

அறிவுலகத்தின் பயணம் ஒருபோதும் முடிவதில்லை. கல்வி என்பது எழுத்தறிவு மட்டுமில்லை. அது எப்போதும் மாறிக் கொண்டிருக்கிற உலகிற்குத் தேவையான திறனோடு குழந்தைகளை நல்ல குடிமக்களாக உருவாக்குவதாகும். நமது நோக்கம் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு முன்னேறக் கற்பதாகும். ஆதலால், நமது குறிக்கோள் “நம் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக” என்பதாகும். இறைவன் நமது நோக்கங்களை வார்த்தைகளுக்கு அப்பால் செயல்படுத்த உதவுவானாக.

செப்டம்பர் 2004-இல் துவங்கப்பட்ட “தமிழ் வகுப்பின்” ஆண்டறிக்கையை வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். நமது குழந்தைகளுக்கு நமது வேர்களையும் மதிப்பையும் சக்தியையும் பயிற்றுவிப்பதற்கான ஒரு திட்டத்தின் அவசியம் இருந்தது. பெற்றோர்களும், நமது முதற் கூட்டத்திற்கு வருகை தந்த மூத்தோரும் திட்டத்தை மனப்பூர்வமாக ஆதரித்தனர். இன்றைக்கு பலரது ஆதரவையும் பார்க்கிற போது நம்பிக்கை மேலும் வளர்கிறது. என்றாலும் இன்னும் அதிகமான பங்களிப்பும், உதவியும், குழந்தைகளுக்கான இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமாகிறது.

திரும்பிப் பார்க்கையில்

இந்த அறிக்கையை நான் இந்தத் திட்டத்தை துவங்கிய இடத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். முதற் பருவத்தை முடிக்க வேண்டும் என்கிற கடமை நமக்கிருந்தது. இந்தத் தருணத்தில் இந்தத் திட்டம் இந்த நிலையை அடைவதில் பாடுபட்ட இரண்டு பேரைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் நமது சமூகத்தின் சார்பாக, நம் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து திரு. வெங்கடகிருஷ்ணனுக்கும், திரு. காழி அலாவுதீனுக்கும் நமது நன்றிகளைப் பதிவு செய்கிறேன். இருவரும் தங்களது நேரத்தையும், உழைப்பையும் உற்சாகத்தோடு செலவிட்டனர். நமது குழந்தைகளின் தாய் மொழிக் கல்வி கற்கிற திட்டம் இதனால் தீவிரப்பட்டது மட்டுமல்ல, மொத்தச் சூழலும் மகிழ்ச்சிகரமாகவும் மாறியது. இந்தத் தருணத்தில் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதில் உதவிய திருமதி. கலை அருணுக்கும் எங்கள் நன்றிகளைப் பதிவு செய்கிறோம். பெற்றோர்களுக்கும், புரவலர்களுக்கும் நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம். அவர்களது தூண்டுதலும், ஒத்துழைப்பும் இல்லாமல் நாங்கள் இதைச் செய்திருக்க முடியாது. இந்தத் தருணத்தில் ஆர்வத்தோடு வழிக்காட்டுதல் நல்கிய சிலரைக் குறிப்பிட விரும்புகிறேன். தொலை நோக்குப் பார்வையுடைய திரு. நஜீமுதீன், எங்களை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட திரு. ஜே.வி. ரமணி, நமது தாய்மொழியின்பால் மாறாத காதல் கொண்ட திரு. மு. இராமனாதன் ஆகியோரின் வழிகாட்டுதல் பெரும் உதவியாக இருந்தது. இந்த வாய்ப்புகளையும் மகிழ்ச்சியையும் எங்களுக்கு வழங்கிய குழந்தைகளையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

டாக்டர் ஜவஹர் அலி அவர்கள்

குழந்தைகளால் அன்போடு “ டாக்டர் அங்கிள் “ என்று அழைக்கப்படுகிற டாக்டர் அலி இந்தத் திட்டத்திற்கு நல்கியிருக்கிற உதவி மிக அதிகம். வகுப்புகள் நடைபெறும் சனிக்கிழமை மதியப்பொழுதுகள் அவரது உணவகம், நம் வகுப்பறையாக மாறியது. உணவகத்தின் பணியாளர்கள் அனைவரும் உவந்து உதவினார்கள்.

டாகடர் அலி ! உங்கள் உதவிக்கு எங்களால் நன்றி மட்டுமே சொல்ல முடிகிறது. உங்களது உதவியின்றி இந்தத் திட்டம் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது. உங்கள் நலனுக்காக நாங்கள் பிரார்த்தனையும் செய்வோம்.

வகுப்புகள்

மாணவர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். உயர்தரம், இடைத்தரம் மற்றும் அடிப்படை. துவக்கத்தில் 45 குழந்தைகள் சேர்ந்தனர். ஆனால் இது மெல்ல மெல்லக் குறைந்து இப்போதைய அளவான 35 குழந்தைகள் என்றாகியது. இந்த மாணவர்கள் முதற் பருவத்தை முடித்து இன்று சான்றிதழ் பெறுவதில் அதிக மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றனர் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

ஆரம்பத்தில் பல நல்ல நூல்களின் ஒளி நகல்களை எடுத்து மாணவர்களுக்கு வழங்கினோம், பிறகு சென்னையிலிருந்தும், அதற்குப் பிற்பாடு சிங்கப்பூரிலிருந்தும் நூல்களை வருத்தினோம். சிங்கப்பூர் நூல்கள் வெளிநாட்டு இந்தியர்களின் சூழலுக்கு பொருத்தமாக இருக்கிறது. மாணவர்களின் முன்னேற்றத்தை, தொடர்ந்து நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் அளவிட முடிகிறது. இன்று வெளியிடப்படும் ஆண்டு மலரில் மாதிரி வினாத்தாள் அச்சிடப்பட்டிருக்கிறது.

2004-2005 கல்வியாண்டில் தமிழ் வகுப்புகளின் பல்வேறு நடவடிக்கைகளைச் சுருக்கமாக வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.

1. ரம்ஜான் கொண்டாட்டம் :

நமது ஆரம்ப கால வகுப்புகள் புனித ரம்ஜான் மாதத்தில் நடந்தன. பல குழந்தைகள் நோன்பு நோற்ற போதும் வகுப்புகளுக்கு வந்தனர். பெருநாள் வந்ததும், நாம் கொண்டாடினோம். மகிழ்ச்சியைக் குழந்தைகளோடு இணைந்து பரிமாறிக் கொள்வது இன்பகரமான அனுபவமாக அமைந்தது.

2. சுனாமிப் பேரழிவு

நமது தாய்த் திருநாட்டையும், தென் கிழக்கு ஆசிய நாடுகளையும் தாக்கிய சுனாமி இலட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்டது. உயிரிழந்தோருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் வகுப்பறையில் அஞ்சலி செலுத்தினோம், இயற்கையின் இந்தப் பேரழிவைப் பற்றிக் குழந்தைகளுக்கு இயன்ற வரை விளக்கினோம், இந்திய முஸ்லீம் கழகமும், தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் சுனாமிக்குத் திரட்டிய நிதியில் குழந்தைகளின் பங்களிப்பாக இரண்டாயிரம் டாலர் நிதி வழங்கினோம்.

3. புத்தாண்டு 2005

புத்தாண்டை வரவேற்கிற முகமாக சிறிய நிகழ்ச்சி நடத்தி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினோம். புத்தாண்டுத் தீர்மானங்கள் மேற்கொள்ளுமாறு குழந்தைகளை நினைவூட்டினோம். இந்த வாழ் நிலையை அவர்கள் அடைந்திருப்பது குறித்து நிறைவு கொள்ள வேண்டுமென்றும் குழந்தைகளுக்கு விளக்கிச் சொன்னோம்.

4. பொங்கலோ பொங்கல்

பொங்கல் விருந்து ஒன்று நடத்தினோம், நம் கலாச்சாரத்தில் பொங்கல் திருநாளின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு விளக்கினோம். நமது ஆசிரியர் திரு. வெங்கட் குழந்தைகளின் ஆர்வமிகு கேள்விகளுக்கு பதிலளித்தார். குழந்தைகளுக்குச் சர்க்கரைப் பொங்கல் வழங்கினோம். வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒரு பொங்கற் பொட்டலமும் வழங்கினோம்.

5. பக்ரீத்

பக்ரீத் பண்டிகையும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது. குழந்தைகள் வகுப்பறைக்குத் தமது புத்தாடைகளோடு வந்தனர். வண்ணமயமான ஆடைகளை அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டி மகிழ்ந்தது கண்டு அனுபவிக்க வேண்டிய காட்சியாக இருந்தது.

6. சுற்றுலா

ஏப்ரல் 3 ஆம் தேதி Lei Yue Mun விடுமுறை முகாமுக்கு குழந்தைகளோடு பெற்றோரும் கலந்து கொண்ட சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தோம். இந்தச் சுற்றுலாவில் மெய்ஃபூவிலிருந்தும் குழந்தைகளும், பெற்றோர்களும், அந்தக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரும் திருமதி. சித்ரா சிவக்குமாரும் பங்கேற்றனர். இந்த முயற்சியில் ஈடுபடும் அவருக்கு எங்களது பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறோம். சுமார் 150 பேர்கள் இதில் கலந்துக் கொண்டார்கள். இந்தச் சுற்றுலாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கதை சொல்லுதல், தமிழ் வாசித்தல், மாறு வேடப் போட்டி போன்றவை அவை. எல்லாக் குழந்தைகளும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். மாலையில் திறந்தவெளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஓவியப் போட்டியில் மாணவர்களின் சிறகு விரித்த கற்பனைகளை இனம் காண முடிந்தது. வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் திரு. வெங்கட் மற்றும் திரு. தீன் இந்தச் சுற்றுலா நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தியதில் பெரும் பங்கு வகித்தனர். இது போன்ற பல சுற்றுலாக்கள் வருங்காலத்தில் மிக்க அவசியம். குழந்தைகள் தமக்குள் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிற களமாகவும் இந்தச் சுற்றுலா அமைந்தது.

7. திரு. இராமனின் வருகை

மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் திரு. வி, ராமன் ஏப்ரல் 24 அன்று நமது வகுப்புக்கு வருகை தந்து குழந்தைகளுக்கு ஒரு பன்னோக்கு ஊடகக் காட்சியையும் வழங்கினார். குழந்தைகள் திரைக் காட்சியை மிகவும் ரசித்தனர். கேள்விகளுக்கு உற்சாகமாக விடையளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டாக்டர். அயூப் கல்வி அறக்கட்டளைக்கும், தென்றல் குழுவினருக்கும் எமது நன்றிகள்.

வரவு செலவு கணக்கு

பெற்றோரோடு கலந்து ஆலோசித்த பிற்பாடு நடைமுறைச் செலவிற்காக மாதந்தோறும் ஒரு சிறிய தொகையாக 100 டாலர் வசூலிப்பதென முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 2004 முதல் மாணவர்கள் இந்தத் தொகையச் செலுத்தி வருகிறார்கள். திரு. S.O. ஹபீப் முகமது வரவு செலவுக் கணக்குகளைக் கவனிக்கிறார். இந்தக் கல்வித் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும், வகுப்புகளுக்கு சொந்தமாக இடம் வேண்டும். இதற்கு சமூகத்தின் மற்றும் கொடைக்குணமுள்ளோரின் ஆதரவும் உதவியும் அதிகம் தேவைப்படுகிறது.

நன்கொடைகளும் ஆதரவும்

1. முதல் பெற்றோர் தினக் கூட்டச் செலவுகளை திரு. நஜீமுதீன் ஏற்றுக் கொண்டார்.

2. தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நமது வகுப்புகளுக்கு 10,000 டாலர் வழங்க முன் வந்திருக்கிறது. இதற்கு முன் முயற்சி மேற்கொண்ட கழகத்தின் அப்போதையத் தலைவர் திரு. ஜே.வி.ரமணிக்கு எனது நன்றிகள்.

3. இந்திய முஸ்லீம் கழகத் தலைவர் ஏ.எஸ். ஜமால் மணிமேகலைப் பிரசுரம் நிகழ்த்திய புத்தகக் கண்காட்சியிலிருந்து மாணவர்களுக்கு வாங்கிய நூல்களின் செலவை ஏற்றுக் கொண்டார்.

4. மாவட்ட கவுன்சிலர் திரு, டென்னிஸ் வாங் நமது முயற்சிகளுக்கும் , இதை முறையான அமைப்பாக ஆக்குவதற்கும் பெரும் ஆதரவு அளித்து வருகிறார். Mr. Dennis Wang, our District Councilor gave us valuable services to the club formation. அனைவரது ஆதரவிற்கும் எமது நன்றி.

ஆண்டு மலர்

இந்த ஆண்டு விழாவில் ஒரு சிறிய மலர் ஒன்றை வெளியிடுகிறோம். இதன் நோக்கம், இந்த வகுப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதும், குழந்தைகளை மேலும் ஊக்குவிப்பதுமாகும். நன்கொடையாளர்களின் ஆதரவிற்கு நன்றி சொல்கிறோம், அவர்கள் ஒத்துழைப்பின்றி இந்த நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றிருக்க முடியாது. நன்கொடையாளர்களே நன்றி.

முன்னோக்கிப் பார்க்கையில்

இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, இன்னும் அதிகமான தன் ஆர்வத் தொண்டர்களின் உதவியும் ஆதரவும் தேவைப்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகளைப் பயிற்றுவிக்கிற ஆசிரியர் பணிக்கு அதிக உதவி தேவைப்படுகிறது. அதிலும் வருகிற கல்வியாண்டில் இன்னும் அதிகக் குழந்தைகள் சேர்கிற வாய்ப்பு இருப்பதால் இந்த உதவி மேலும் அவசியமாகிறது. இந்த உன்னதமான ஆசிரியப் பணியில் தோள் கொடுக்க மேலும் ஒன்றிரண்டு பேர் முன் வந்திருக்கின்றனர் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ஆயினும் நமக்கு இன்னும் அதிக ஆதரவு தேவைப்படுகிறது. ஒரு சிலரே இப்போது சுமந்து கொண்டிருக்கிற சமூகப் பொறுப்பை, மற்றவர்களும் இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம் நாம் “ஒரு பெரிய குடும்பமாக” மாற முடியும். இறைவனின் அருளால் இந்த வகுப்பு ஒரு நாள் ஒரு பெரிய பள்ளியாக வளர வேண்டும்.

இதை நனவாக்க நாம் அனைவரும் கை கோர்க்க வேண்டும். நாம் அனைவரும் இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக மாற வேண்டும்.

இந்த அறிக்கையை சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்களோடு முடிக்க ஆசைப்படுகிறேன். “நமது கல்விப் பண்பு நலன்களை உருவாக்க வேண்டும் ; எண்ணங்களின் ஆற்றல் அதிகரிக்க வேண்டும்; அந்தக் கல்வி ஒவ்வொருவரும் தமது சொந்தக் காலால் நிற்கிற அறிவாற்றலை வளர்க்க வேண்டும்”.

நன்றி
தைக்கா உபைதுல்லா